அகில இந்திய ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் கர்நாடகா ஆர்.துரை அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் மாநிலத் தலைவர் கிஷோர் பிரசாந்த் அவர்கள் முன்னிலையில் அகில இந்திய ராஜீவ் காந்தி யாத்ராவின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே டாக்டர் எஸ். பஞ்சலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கோ அவர்களிடம் வழங்கப்பட்டு புதுடில்லியில் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டது.
இந்த தொடர் ஜோதி யாத்திரை ஆகஸ்ட் 9 தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் கடந்து ராஜீவ் காந்தியை பிறந்த நாளான 20 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் அனைத்து மாநிலத்தினுடைய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வைப் பற்றி யாத்ரா ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் எஸ்.பஞ்சலிங்கம் நம்மோடு உரையாற்றியதில் இந்த நிகழ்ச்சி 33 ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்து வருகின்றது.
தமிழகத்துக்கு வலு சேர்ப்பதற்கும் அமரர் ராஜீவ் காந்தி அவருடைய புகழை மங்காமல் தாங்கி பிடிப்பதற்கும் அணையா ஜோதியை என்றைக்கும் அணியாமல் காத்திடவும் மத நல்லிணக்கத்தை வலுப்பெறச் செய்திட இன,மத வேறுபாடுகளைக் களைந்து சாதாரண பாமர மக்களை ராஜீவ் காந்தி அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு செயலாற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து ராஜீவ் காந்தி அவர்களுடைய புகழை அவருடைய திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று துண்டு பிரசுரங்களாகவும் நோட்டீஸ் வாயிலாக மக்களை சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்களின் சீரிய தலைமையில் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தை நடத்திட ஊக்கமும் நல்ல ஆதரவையும் அழித்து வரும் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் பிரியங்கா காந்தி அவர்களுக்கும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்து இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஆக்கமும் ஊக்கமும் உற்சாகப்படுத்திய அன்புத் தலைவர்களுக்கு பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என கூறினார் மேலும் இந்நிகழ்ச்சிக்கு வேட்டையாடும் புதூர் பேரூராட்சி மனித உரிமை துறை தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.