நாகர்கோவில் நவ 13
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் 2019 ஆம் ஆண்டு மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக தேர்தல் நடைபெற்றதை குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டிலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்திய முதன்முறையான ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகும். ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர். ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக தேர்தல் Pilot Project ஆக பயன்படுத்தப்பட்டது.
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 114 கிராம ஊராட்சி பதவி இடங்களும், 10 ஊராட்சிமன்றத்தலைவர் பதிவியிடங்களும். 13 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களும், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் முடிவு பெற்றபின் வாக்கு எண்ணிக்கை விரைவில் முடிக்கப்பட்டு முடிவுகள் விரைவில்
வாக்கு எண்ணிக்கை நாளில் பிற்பகலுக்கு முன்னரே வெளியிடப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரம் பயன்படுத்தியதன் மூலமாக கால விரையம். அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது. இது ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு புது
புரட்சியாகும். வரும் காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மூலமாக செயல்படுத்துவது எளிதாக இருக்கும். கடந்த தேர்தலில் பயன்பாட்டின் சாதகங்கள் மேலும் வரும்
காலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்
தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி. தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த்
கிருஷ்ணா, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர். வட்டார வளர்ச்சி
அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.