சமீப நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஊட்டி பகுதியில் ஒரு ஒரு மூதாட்டியை புலி அடித்து கொன்ற செய்தி பரபரப்பு ஏற்படுத்தியது. அதன் அதிர்ச்சி மாறுவதற்குள் நீலகிரி மாவட்டம் உதகை பார்சல் வேலி வனப்பகுதி கல்லக்கொரை பழங்குடியினர் மந்து பகுதியில் அதிகாலையில் தோடர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த கோர்ந்தா குட்டன் வயது 38 என்பவரை புலி தாக்கியதில் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் வனவிலங்கு அச்சுறுத்தலால் பெரும் அச்சமடைந்துள்ளனர். தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் புலி தாக்கி இறந்ததையொட்டி அந்தப் புலியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



