மத்திய இணையமைச்சர் எல் முருகன் உதகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வை கொண்டு வந்ததாகவும் கடந்த காலங்களில் பாரத பிரதமர் மோடி அவர்கள் உதகை மருத்துவ கல்லூரியை துவங்கி வைத்ததாகவும் பாம்பன் பாலம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக 8300 கோடி ரூபாய் திட்டங்களை பாரத பிரதமர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் செயல்படுத்தியிருக்கும் நிலையில் புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசு பாரத பிரதமரை தமிழக முதல்வர் சந்திக்காமல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் இதற்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென செய்தியாளர் சந்திப்பின் போது எல். முருகன் தெரிவித்தார். சந்திப்பின் போது மாவட்ட தலைவர் தருமன் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், சபிதா, போஜன் மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உதகை மண்டல தலைவர் ரித்து ஆகியோர் உடன் இருந்தனர்.



