நாகர்கோவில் – நவ – 04,
கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை. ஏ. எம். கே. மது போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் மற்றும் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவில் குருசடி கிறிஸ்த்தவ ஆலயத்தில் வைத்து நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து விதிகள் மற்றும் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார். நாட்டுப்புற கலைஞர் கலைமாமணி விருது பெற்ற பழனியா பிள்ளை நாட்டுப்புற பாடலுடன். விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடன் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் , பாலசெல்வன். போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.