திண்டுக்கல் ஜூலை: 31
தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய ஊழியர்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.டி. 81 அரசு மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தின் புதிய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்
எம்.சரவணன் தலைமை தாங்கினார். மாநில தணிக்கையாளர் ஆர்.ராதா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்
பி.ஜெயச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம். நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எஸ்.பூபதிராஜ் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் துணைத் தலைவர்
ஏ.செல்லபாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் என்.ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜி.சின்னசாமி, வி.சண்முகவேல் ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இப்போது பொதுக்குழு கூட்டத்தின் போது தீர்மானங்களான பணியாளர் கூட்டுறவு
சங்கத்தில் பணியாற்றும்
ஊழியர்களுக்கு போனஸ் தொகை உயர்த்தி வழங்க
கோரியும், ஓய்வூதியத்திட்டம் செயல்படுத்த கோரியும், 10
ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் தற்காலிக
பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட கோரியும்,
நிரந்தரப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர்கள்போல்
தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்கிட கோரியும், மத்திய
கூட்டுறவு வங்கியிலிருந்து விரைவில் கடன் அனுமதிக்க
கோருதல், தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான
கணினி மற்றும் பொதுவான கணினி மென்பொருள்
அமைத்துதருதல், போன்ற 10 அம்ச கோரிக்கைகளை
நிறைவேற்றித்தர தமிழக அரசை வலியுறுத்தி வருகின்ற
ஆகஸ்ட் 12,13,14-ம் தேதிகளில் மாவட்ட மற்றும் மண்டல
அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், அதனை தொடர்ந்து
மாநில அளவில் சென்னையில் குடும்பத்துடன் கலந்து
கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் நிர்வாக குழு உறுப்பினர்
ஜி.சௌடீஸ்வரி நன்றி கூறினார்.



