தருமபுரி, டிசம்பர் 05 –
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுசாலையில் 02.12.2025 ஆம் தேதி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை இயக்குனர் ருபேஷ் குமார் மீனா IPS உத்திரவின் பேரில் கோயம்பத்தூர் காவல் கண்கணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஈரோடு துணை காவல் கண்கணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில் கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளர் சிவனேஸ்வரன் மற்றும் உதவி ஆய்வாளர் யாசர் மௌலானா, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் சுரேஷ் உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தருமபுரி மாவட்டம், தருமபுரி to பென்னாகரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஓம் சக்தி பார்க்கிங் யார்டில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரேஷன் அரிசி உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்த வாகனத்தை (TN 34 V 4487) சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகதிட்ட ரேஷன் அரிசி 600 முட்டைகளில் மொத்தமாக 30,000 கிலோ (30டன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த வாகனம் மற்றும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரித்து இச்சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்டம் சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் ஆனந்த குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தருமபுரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையினர் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.



