தருமபுரி, டிசம்பர் 27 –
தருமபுரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சங்கங்களின் மாவட்ட தலைவர் குமார் தலைமையில், மாவட்ட செயலர் அசோக்குமார், சுகாதார செவிலியர் சங்கத் தலைவி செல்வி ஆகியோர் முன்னிலையில்
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை சி பி எஸ் முற்றிலும் ஒழித்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகையையும் மற்றும் அரசின் பங்களிப்பு தொகையையும் வட்டியுடன் சேமநல நிதியாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பணி புரியும் கிராம உதவியாளர், சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியாளர், ஊர் புற நூலகர்கள், எம் ஆர் பி செவிலியர் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து நிலை காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும். அரசு பணியாளர்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை அரசு காப்பீட்டு திட்டத்திலிருந்து 50% மட்டுமே வழங்கப்படுவதை மாற்றி அனைத்து அரசு பணியாளர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவினத்தை 100% வழங்க வேண்டும். உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



