தஞ்சாவூர் மே 28
தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் எம் .தேவதாஸ் அனஸ் அடிகளார் (வயது 77 ) உடல் நல குறைவு காரணமாக தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இறைவனடி சேர்ந்தார்.
இவருடைய உடல் தஞ்சையில் உள்ள குருமார்கள் ஓய்வு இல்லத் திற்கு கொண்டுவரப்பட்டது.
உடல் தஞ்சாவூர் மேரிஸ் கார்னரில் உள்ள திரு இருதய பேராலயத்திற் கு கொண்டுவரப்பட்டது. நாளை செவ்வாய்க்கிழமை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் தேவதாஸ்அம்புரோஸ் அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 6 தேதி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் மரிய தாஸ் ரஞ்சிதம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்கள் 3 சகோதரிகள் உள்ளன. தேவதாஸ் அம்புரோஸ் தொடக்கப்பள்ளி அம்மாபேட்டை விண்ணரசி தொடக்கப்பள்ளியிலு ம் , உயர்நிலை கல்வியை உக்கடை அ. அப்பாவு த் தேவர்பள்ளியிலும் முடித்தவர். புதுமுக வகுப்பை பூண்டி புஷ்பம் கல்லூரியிலும் இளங்கலை வரலாறு பட்ட படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழக த்தில் முடித்தார்
கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அம்மாபேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் குரு பட்டம் பெற்றார்.இவர் நாகப்பட்டின த்தில் உதவி பங்கு தந்தையாகவும் 1974 -79 ஆம் ஆண்டு வரையிலும், பெங்களூரு பேதுரு கல்லூரி விவிலிய பேராசிரியராக 1984 90 ஆம் ஆண்டுகளிலும், அதே கல்லூரியில் துணை அதிபராக 1995 -97 ஆம் ஆண்டுகளிலும் பொறுப்பு வைத்தவர்.
தஞ்சாவூர் மறை மாவட்டத்தின் 3.வது ஆயராக கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பொறுப்பேற்றார் . ஆயராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.