கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா முருகேசன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.



