கன்னியாகுமரி, நவ. 27 –
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் தமிழக துணைமுதல்வர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரூர் செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டரணி தலைவர் கவுன்சிலர் வீடியோகுமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அஞ்சைலிங்கம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு, பேரூர் பொருளாளர் ராஜ்திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பேரூர் செயலாளர் இளங்கோ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் இராஜாமணி, நிர்வாகிகள் சுயம்பு, ரவி, ஜெயக்கொடி, பாலன், அலெக்ஸ், மதியழகன், மனோபவரா, தாணுமூர்த்தி, துரைபாண்டி உட்பட பல கலந்து கொண்டனர்.
மயிலாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மயிலாடி பேரூர் செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மயிலை வேதமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூர் செயலாளர் மயிலை டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட பிரதிநிதி மதன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜேஷ், கிளைக் கழகச் செயலாளர்கள் முத்து கணேசன், சிற்பி சுந்தர் கோபாலகிருஷ்ணன், ராஜலிங்கம், பிஎல்ஏ சரவணன் ராஜா மாதவன் பிஎல்ஏ செல்வன், பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



