திருப்பத்தூர்:ஆக:22, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.ராஜமாணிக்கம் மாவட்ட தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் குமார்,பாபு, சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை,ரமேஷ், மேகநாதன், பூபாலன், பன்னீர் , ராஜகம்பீரம் ஆகியோர் வாழ்துரை வழங்கினர்.
மாநில நிர்வாகிகள் ரவிக்குமார், கணபதி லதா, குமரன் ஆகியோர் கவன ஈர்ப்பு உரையினை நிகழ்த்தினர்.
மாநில நிர்வாகிகள் பேசுகையில்: பல்வேறு துறைகளுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவது பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் அடுத்த கட்டமாக சென்னை சைதாப்பேட்டையில் செப்டம்பர் 27 அன்றைய தினத்தில் மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு ஆர்பாட்டம் நடக்கும் என்று பேசினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகி சசிகுமார் நன்றியுரை வழங்கினார்.கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.