கன்னியாகுமரி மே 13
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ள சன்னதி தெருவில் சாக்கடை கழிவுநீர் ஓடியது குறித்து 11ஆம் தேதி தின தமிழ் செய்தி வெளியிட்டு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தது.
தின தமிழ் செய்தி எதிரொலியாக சுகாதார பணியாளர்கள் உடனடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் தினசரி சுத்தம் செய்ய ஆணை பிறப்பித்தார்.
தூய்மையை தொடர்ந்து பராமரிக்க கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.



