நாகர்கோவில் ஜூன் 10
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் – கனிமவளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒட்டுனரிடம் போலீஸ் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளம் மூலம் வெளியானதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்ம் வழியாகவும் கேரளாவுக்கு தினசரி 500 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த டாரஸ் லாரிகள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏராளம். இதனால் டாரஸ் லாரிகள் நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நேரங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் கட்டுப்பாடுகளை மீறி இந்த லாரிகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆரல்வாய் மொழியில் உள்ள வாகன சோதனை சாவடி மையத்தில் டாரஸ் லாரி பாரம் அதிகம் ஏற்றி வருவதை கண்காணிக்கவும் முறையாக அனுமதி பெற்று இருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்கும் சோதனை சாவடி மையம் இயங்கி வருகிறது. அந்த சோதனை சாவடி மையத்தில் உள்ள போலீசார் டாரஸ் லாரி வாகனங்களில் லஞ்சம் வாங்கி விதிமுறைகளை மீறி அவர்களே அனுப்பி வருவதாக கூறப்பட்டது அதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி சோதனை சாவடி மையத்திலேயே ஒரு புஸ்தகத்தில் மறைத்து வைக்கின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் மூன்று காவலர்களையும் ஆயுதப்படை மைதானத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு.