சென்னை: மே 23,
தனிநபர் சிறு கடன் வழங்கும் முன்னணி நிறுவனமான எல் &டி ஃபைனான்ஸ் நிறுவனம். சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்வதற்கு சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆதரவையும் வழங்குவதற்காக “முழுமையான வீட்டுக்கடன்” என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
முழுமையான வீட்டுக்கடன் திட்டமானது, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிதிக்கான விண்ணப்ப மற்றும் வினியோக செயல்முறை வழியாக வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் வாடிக்கையாளருக்காக பிரத்யேக நல்லுறவு மேலாளர் ஒருவர் இருப்பதும் மற்றும் வீட்டு உள்அலங்கார செலவுகளுக்கான நிதியுதவியைப் பெறுவதற்கான வசதி இதில் இருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
எல்&டி ஃபைனான்ஸ் திட்டத்தின் முதன்மை செயல் அதிகாரி சஞ்சய் கர்யாலி இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “எங்களுக்கு சென்னை மாநகரம் ஒரு மிக முக்கிய சந்தையாகும்; முழுமையான வீட்டுக்கடன் திட்ட அறிமுகத்தின் மூலம் தற்போது கட்டப்பட்டு வருகின்ற மற்றும் குடிபுக தயார் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக வீட்டுக்கடன்களைப் பெற விரும்புகின்ற புதிய நபர்களை நாங்கள் முதன்மை இலக்குப் பிரிவினராக நாங்கள் கருதுகிறோம். நுகர்வோர்களது நடத்தைப் போக்குகளை நன்கு புரிந்து கொண்டிருப்பதன் வழியாக ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான நிதி திட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்குவதில் இலக்காகக் கொண்டதாக முழுமையான வீட்டுக்கடன் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது
குறைவாக அல்ல, முழுமையாக” என்ற முத்திரை முழக்கத்துடன் திட்டத்தின் சிறப்பம்சங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் மூன்று தொலைக்காட்சி விளம்பரங்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.