தருமபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அரூரில் நடந்த அரசு விழாவில் ஆட்சியர் சதீஷ் பங்கேற்று 1,237 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பிலான அரசு நடத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆ. மணி எம்பி, அரூர் எம்எல்ஏ சம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 1,237 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் சான்று ,இலவச வீட்டு மனை பட்டாக்கள், இ- பட்டாக்கள், மின்னணு குடும்ப அட்டைகள், டிராக்டர்கள், சொட்டு நீர் பாசனம், தோட்டக்கலை பயிர்கள், மகளிர் சுய உதவிக் குழு கடனுதவிகள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்,தொழிற் கடனு தவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி, அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் தனபால் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



