திருப்பத்தூர்: ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம், மேல் அச்சமங்கலம், பூர்விகாமணிமிட்டா, கதிரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் அச்சமங்கலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு துறை, ஆதிதிராவிட நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய பல்வேறு துறைகள் பங்கேற்றன. பொதுமக்கள் நேரடியாக மனுக்களை வழங்கினார்கள். பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று உடனுக்குடன் அதற்கான தீர்வும் காணப்பட்டது. 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர். மேலும் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளதாக விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனுக்குடன் கணினி அச்சிட்ட ரசீது வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து சில பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை ஆகிய உத்தரவு ஆணையினை வழங்கினார்கள். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் SKT அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அச்சமங்கலம் எஸ். சிவகுமார், மேல் அச்சமங்கலம் வீரப்பன், பூரிகாமணி மிட்டா பரமசிவம், கதிரிமங்கலம் துணைத் தலைவர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, மோகன்ராஜ், ஊராட்சி எழுத்தர்கள் சரவணன், பரிமளா, சக்திவேல், குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், மனுதாரர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பல கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அச்சமங்கலம் ஊராட்சி செயலாளர் ஆர்.சரவணன் நன்றியுரை வழங்கினார்.