மயிலாடுதுறை ஏப் 23
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது . சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார்.ஏடிஎஸ் தமிழ்செல்வன்,ஏஆர்சி அசோக்,பிச்சை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேஸ் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு உள்ளூர் மக்களுக்கு, அனைத்து கடைகள் தொழிற்கூடங்களில் வேலை வாய்ப்பு வழங்கவும். நடைமுறை தொழிலாளர் சட்டங்களை கூறி ஆலோசனை வழங்கினார்.
மேலும் அனைத்து நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறையில் உள்ள தொழிலதிபர்கள்,வர்த்தக சங்கம் உட்பட பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செயலாளர் சிவலிங்கம் வரவேற்றார். இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், நன்றி கூறினார்.



