உத்தனப்பள்ளி ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டி, தென்பெண்ணை ஆறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை.
உத்தனப்பள்ளி லட்சுமி நரசிம்ம பட்டா ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தனபள்ளி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பட்டா ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டி தென்பெண்ணை ஆறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சம்பங்கிராமைய்யா மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தெரிவித்ததாவது.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் கிராமங்களில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் உத்தனப்பள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம பட்டா ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால், இந்த ஏரியில் உள்ள வண்டல் மண் எடுக்கும் பட்சத்தில் ஏரியில் ஆழம் அதிகமாகி நீர் இருப்பு அதிகமாக தேங்கும் இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் ஏரியில் மண் எடுக்க அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களுக்கு மாநில தலைவர் சம்பங்கிராமைய்யா கோரிக்கை விடுத்துள்ளார்.



