வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா தென்தாமரைகுளம்., பிப். 9. வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நூற்றாண்டு விழாவில் தீபம் ஏற்றி மாவட்ட கல்வி அலுவலர் கிறிஸ்டல் ஜாய்லெட் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த உதவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர்கள் முன்னின்று நடத்தினர்.



