திருப்பூர் ஜூன்: 4
ரயில்நிலையம் முன்பு அமையபெற்றுள்ள தந்தை பெரியார் அறிஞர் அண்ணா சிலை, மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்துநிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் M.L.A., மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ விருந்து வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் TKT மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர்,
மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி பொறுப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், LPF நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திறளாக கலந்துகொண்டனர்.



