நிலக்கோட்டை,ஆக.21: திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை காவல் நிலையம் பின்புரம் உள்ள நடராஜபுரத்தில் பழுதடைந்த கழிவறை மற்றும் தண்ணீர் தொட்டியுடன் கூடிய குழாயை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காவல் நிலையம் பின்புறமுள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு நடராஜபுரம் மெயின் தெருவி உள்ள பொதுகழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டியுடன் கூடிய குழாய்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றி தொடர் பழுது காரணமாக, தற்போது மேலும் கடுமையாக பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது,அதனை சுற்றியுள்ள காலி இடங்களையும் அக்கம்பக்த்தினர் ஆக்கிரமிப்பு செய்வதுடன் குப்பைக்கழிவுகளை கொட்டி வருகின்றனர்,
இந்நிலையில் தற்போது அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பழுதடைந்த பொதுக்கழிப்றையும், குடிநீர் குழாயையும் மீண்டும் சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், அதனைச் சுற்றியுள்ள அரசு நிலத்தையும் பாதுகாக்க வேண்டும்
என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



