தென்காசி மாவட்டம் திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவத்திற்கு முழு காரணம் திமுக அரசு தான் அதனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் திமுக அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் கட்டண ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தனகுமார் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன் அருள்செல்வன் ராமநாதன் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் , நகரத் தலைவர் முத்துக்குமார் ,செந்தூரப் பாண்டியன், சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், மற்றும் மாநில மாவட்ட அணி பிரிவு மண்டல் கிளை கமிட்டி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.