By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்
தென்காசி

பழனி நாடாரை அவதூறாக பேசிய பாஜக கவுன்சிலர்

Last updated: March 26, 2025 3:32 pm
March 26, 2025
34 Views
Share
SHARE

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரை அவதூறாக பேசிய தென்காசி நகர் மன்ற பாஜக கவுன்சிலர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்டபொதுச் செயலாளர் சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன் என்பவர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பற்றி அநாகரிகமாகவும் அபாண்டமாகவும் சில தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தென்காசி நகராட்சி பகுதிக்கு எந்தவித வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என்றும், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவதூறாக பேசியுள்ளார்.
அவர் கூறிய அவதூறுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கும் வகையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தென்காசி நகராட்சி பகுதிக்கு இதுவரை பல கோடி ரூபாய் செலவில் தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு உள்ளார் என்பதை புள்ளி விவரங்களோடு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வால்போஸ்டர்கள் அச்சடித்து தென்காசி நகராட்சி பகுதி முழுவதும் ஒட்டி உள்ளோம்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தனது தொகுதி வளர்ச்சி நிதி மூலம் தென்காசி நகராட்சி பகுதிகளில் செய்துள்ள பணிகள் அனைத்திற்கும் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளர்ச்சி பணியையும் துவக்கி வைக்கின்ற போதும் அந்தப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்கின்ற போதும் அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் படங்களுடன் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளில் தென்காசி நகர் மன்றத் தலைவர் மற்றும் அந்தந்த வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்கள் எங்கள் கூட்டணிக் கட்சிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்தந்த வார்டு பொதுமக்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினரின் சாதனைகளை பற்றி நன்கு அறிவார்கள்.
இதே பாஜக உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் வெற்றி பெற்றுள்ள வார்டு எண் 15ல், மலையான் தெருவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க பாஜக கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் நகர்மன்ற கூட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் இந்த நகராட்சி பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று முட்டாள் தனமான அவதூறுகளை பேசி இருக்கிறார்.
இவர் சுய நினைவோடு தான் இருக்கிறாரா?
என்ற சந்தேகம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டு உள்ளது.
எனவே பாஜக கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியனின் அவதூறு பேச்சுகளுக்கு உடனடியாக பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் இந்த பாஜக கவுன்சிலர் தனது பதவியை பயன்படுத்தி இவர் செய்து வரும் சட்டவிரோத செயல்களை பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவோம்.
பாஜக கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன் செய்து வரும் பித்தலாட்டங்களை பொதுமக்கள் மத்தியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி மூலம் விரைவில் பகிரங்கமாக அம்பலப்படுத்துவோம் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு
தென்காசி ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் பதவியேற்பு
கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

January 24, 2025
51 Views
சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
திரவ உயிர் உரம் செயல்விளக்கமளித்த மாணவிகள்
கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account