தஞ்சாவூர் ஜன 4.
செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப் படுத்தும் கருவிக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழைய திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார்கள் வாங்கவும், மானியத்தில், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின் மோட்டார்கள் வாங்கவும் மானியத்தில் மோட்டார்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது
நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களி டம் இருந்து மின் மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க இயலும். மேலும் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 15 ஆயிரம் மானியமாக வழங்கப் படுகிறது
மேலும் விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங் களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்லும் போது பாம்பு கடி ,விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்க நேரிடுகிறது .இதை தவிர்க்கும் வகையில் தங்களது கிணறுக்கு செல்லாமலே தங்களது இருப்பிடத் திலிருந்து மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது .இதன் மூலம் விவசாயம் எங்கிருந்தாலும் தங்களின் செல்போன் மூலம் பம்பு செட்டுக ளை இயக்கவும், கண்காணிக்கவும் முடியும். இந்த செல்போன் மூலம் இயங்கும் தானியங்கிப் கட்டுப் படுத்தும் கருவிகள் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 7000 வரை மானியமாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது
இத்திட்டங்களில் பயன்பெற தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவை யாறு பூதலூர் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் மனோஜிப் பட்டி ரோடு கிருஷ்ண நகரில் உள்ள தஞ்சாவூர் உப கோட்ட வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் அலுவலகத்தையும், கும்பகோணம் அம்மாப்பேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் திருபுவனம் தொழில்பேட்டை அருகில் உள்ள கும்பகோணம் உபகோட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், பட்டுக்கோட் டை மதுக்கூர் பேராவூரணி சேது பாவாசத்திரம் வட்டாரங்களை சேர்த்து விவசாயிகள் பட்டுக்கோட் டை பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள உபகோட்டை வேளாண் பொறியிய ல் துறை உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தின் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்டவாறு அதில் கூறப் பட்டுள்ளது.



