தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையத்தில் உள்ள தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் செய்யும் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் திறந்துவைத்து, 6 விவசாயிகளுக்கு இராகி நேரடி கொள்முதலுக்கான இணைய வழியில் பணபரிவர்த்தனை செய்யப்பட்ட ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தேன்மொழி, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) குணசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



