ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து மாணவர்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்கல்லூரியில் உள்ள அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். ஏஜேஎம் பவுண்டேஷன் நிறுவனர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகளையும், போதைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் அதன் ஆலோசகர் அபிஷேக் ஸ்ரீ மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இந்நிகழ்வை கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஏஜேஎம் பவுண்டேஷன் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தனர்.



