திண்டுக்கல் மே. 14
திண்டுக்கல் தாமரைப்பாடியில் உள்ள அந்நூர் இஸ்லாமிய கல்லூரியில் மெளலவி ஆலிம், ஹாஃபிழ் 59 பேர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி அந்நூர் இஸ்லாமிய கல்லூரியின் உள் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் அந்நூர் இஸ்லாமிய கல்லூரி நிறுவனரும், முதல்வருமான மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ். எம்.ஒய்.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு புரவலர்கள் முன்னிலை வகித்தார்கள். திண்டுக்கல் அந்நூர் இஸ்லாமிய கல்லூரியின் உறுப்பினர் மௌலானா மௌலவி ஏ.முஹம்மது சிராஜுத்தீன் பிலாலி வரவேற்புரை ஆற்றினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான அல்ஹாஜ். டாக்டர். ஏ. கே. காஜா நஜ்முத்தீன், அரவக்குறிச்சி மஸ்ஜிதுல் அப்ரார் தலைமை இமாம் மௌலானா மௌலவி பி.ஏ. முஹம்மது இஸ்மாயில் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மௌலவி சித்திக் நூரைன் பாஜில் இஸ்லாஹி உறுதிமொழி வாசித்தார்.
முன்னதாக பட்டம் பெறும் மாணவர்கள் தமிழ் குறித்து மௌலவி எஸ். அப்துல் மனாப் நூரைன், ஆங்கிலம் குறித்து மௌலவி ஆர்.ஆகில் அஹமது நூரைன், அரபி குறித்து எம். அப்துல் ரஹ்மான் நூரைன் ஆகியோர் சிறப்பாக பேசினார்கள்.சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர மௌலானா மௌலவி அல்ஹாஜ். எம். அபுதாஹிர் பாகவி பாஜில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியின் போது நூரைன் பேரவை சார்பாக மதரஸா நிர்வாகிகளை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ். அல்ஹாஃபிழ் எம். அப்துல் ஹமீது பாஜில் பாகவி ஹஜ்ரத் கலந்து கொண்டு பேருரை ஆற்றி மௌலவி ஆலிம் பட்டம் பெற்ற நூரைன்கள் 52 பேர், ஹாஃபிழ் பட்டம் பெற்ற 7 பேர் மொத்தம் 59 பேர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் , மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் வைகை எம்.எஸ். தாஜ்தீன், ஆலிம்கள், உலமாக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் அந்நூர் இஸ்லாமிய கல்லூரியின் பொருளாளர் மௌலானா மௌலவி எஸ். முஹம்மது யாசீன் ஜமாலி ஹஜ்ரத் ஆண்டறிக்கையை வாசித்து நன்றியுரை கூறினார்.