தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் அருவி அருகில் செல்லவோ அருவிக்கரை பகுதிகளில் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது வெள்ளம் குறைந்தும் இன்னும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்தி வந்ததையடுத்து குற்றாலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான கணேஷ் தாமோதரனிடம் வியாபாரிகள் முறையிட்டதையடுத்து அவர் மாவட்ட கழக செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு கழக நிர்வாகிகளுடன் திடீர் முகாமிட்டு நிகழ்ச்சி ஒன்றிற்க்காக வருகை தந்த தொழில்துறை அமைச்சர் கணேசன் வாகனத்தை முற்றுகையிட ஆயத்தமான நிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன் பேச்சுவார்த்தை நடத்தி குளிக்க அனுமதி அளித்து விடுவோம் நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது இதனால் குற்றாலம் பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது ஏற்கனவே குற்றாலம் அருவிக்கரை பகுதிகளைச் சார்ந்த வியாபாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர் இந்த சூழ்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா எடுத்த முயற்சியின் காரணமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வியாபாரிகளின் நலன் கருதி உடனடியாக குற்றால அருவிகளில் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கினர் இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் அனுமதி வழங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் வியாபாரிகளுக்காக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு முழு முயற்சி எடுத்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா , குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோருக்கு வியாபாரிகள் சார்பாக நன்றி கூறினர்.



