நாகர்கோவில் அக் 20
கன்னியாகுமரி(கி )மாவட்டம் அதிமுக சார்பில் நாகர்கோவில் பெரிய நாடார் தெருவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53_வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கி பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குமரி மாவட்டக் கழக செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. பச்சைமால் முன்னிலை வகித்தார்.
கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ரயிலடி மாதவன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.