இன்று பட்டணம்காத்தானில் அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
ராஜ்சத்யன் பங்கேற்கிறார்!
அழைக்கிறார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்!!
ராமநாதபுரம், அக்.14-
அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு பட்டணம்காத்தான் நிஷா மகாலில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில்
அதிமுக மாநில தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர்
ராஜ்சத்யன்,
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் சுதா.K.பரமசிவம் , கழக மகளிர் அணி இணை செயலாளர்
கீர்த்திகா முனியசாமி,
மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள்
கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.
மண்டபம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழகச்செயலாளர்கள், கிளை கழக மேலமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழகத்தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெறுமாறு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.