திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தற்செயல் விடுப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில்
நில அளவை களப்பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி தற்செயல் விடுப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்
வினோத்பாலு தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விக்னேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார் மேலும்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும்
அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பொருளாளர் தமிழ்ச்செல்வன் நன்றியுரை நிகழ்த்தினார்.



