கீழக்கரை செப் 18-
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இந்த ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது பெற இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா)தமிழ்நாடு மாநில மையத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதானது இந்த ஓராண்டில் பாலிடெக்னிக் கல்லூரி ஆனது கல்லூரி முதல்வர் சேக்தாவூத் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வியில் செய்த சேவைகள்,
கல்வித் தர மேம்பாடு மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு போன்ற செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தவிருதானது வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள டிஎன்எஸ்சி ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் 57 வது பொறியாளர்கள் தின விழாவின் போது இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது
கடந்த ஓராண்டு காலமாக இந்த விருதினைப் பெற உறுதுணையாக இருந்த நிர்வாகத்தினருக்கும், கல்விப் பணியை சிறப்பாக செய்த ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி முதல்வர் கூறினார்கள்.
முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் யூசுப் சாகிப், செயலாளர் ஜனாபா ஷர்மிளா,
செயல் இயக்குனர் ஜனாப் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா ஆகியோர் கல்லூரி முதல்வர் சேக்தாவூது மற்றும் துணை முதல்வர், துறைதலைவர்கள் ஆசிரிய பணியாளர்களின் சீரிய முயற்சியில் இந்த விருதினைப் பெற்றமைக்கு அவரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்