By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி
ஈரோடுமாவட்டம்

பெண்ணின் உடலில் இருந்த 2.5 கிலோ மண்ணீரல் கட்டி

Last updated: July 4, 2024 10:44 am
July 4, 2024
93 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 4-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கவுதமராஜ் (28). செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யோகாம்பாள் (28). செவிலியர். இவர்களுக்கு மூன்றரை வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. யோகாம்பாளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்றின் இடது பக்கம் கடும் வலி மற்றும் ரத்த சோகை பிரச்சினைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்நிலையில் ஈரோட்டில் உள்ள  ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது, மருத்துவமனையின் குடல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், யோகாம்பாளை பரிசோதித்தார். அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதில், யோகாம்பாளுக்கு மண்ணீரல் வீக்கத்தின் காரணமாக ரத்தத்தில் உள்ள சிவப்பணு மற்றும் தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. யோகாம்பாளின் மண்ணீரலை அகற்றுவதன் மூலமாகவே அவரது நோயை சரி செய்ய முடியும் என்பதை தெரிவித்தனர். இதற்கு யோகாம்பாள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறுதி அளித்ததன்பேரில்,  யோகாம்பாளுக்கு சுமார் இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சை செய்து, மண்ணீரல் அகற்றப்பட்டது. இதையடுத்து 4 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த, யோகாம்பாள் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஈரோடு ஜெம் மருத்துவமனையின் குடல் நோய் நிபுணர் டாக்டர் சதீஷ்குமார் கூறியதாவது:

28 வயதுடைய 38 எடை கொண்ட இளம்பெண், கடும் வயிற்று வலி, ரத்த சோகையால் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதித்தபோது, அவரது உடலில் சராசரி மனிதனின் உடலில் இருக்கும் மண்ணீரலை விட அதிக வீக்கத்துடன் இருந்தது. அதாவது சராசரியாக 250 கிராம் எடையுடன் இருக்க வேண்டிய மண்ணீரல், இப்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடையுடன் இருந்தது. மண்ணீரல் பணி என்பது உடலில் தேவையில்லாத ரத்த சிவப்பணுக்களை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதே ஆகும். அதேசில நேரத்தில் இதுபோல அதிக எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனையை கொடுக்கும். இதுபோல லட்சத்தில் 4 பேருக்கு தான் வரும். மண்ணீரல் இப்படி பலூன் போல வீக்கமாக இருந்தால், எதிர்பாராத விபத்து அல்லது கீழே விழும்போது அது உடைந்து அதிக ரத்த போக்கை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாகி விடும். இதனால், அப்பெண்ணிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மண்ணீரலின் வீக்கம் குறித்தும், அதனை அகற்றுவது மட்டுமே தீர்வு என எடுத்துக்கூறினோம். இதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததன்பேரில், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின்போது அதிக ரத்த போக்கினை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகள் செலுத்தி உடலை தயார் செய்தோம். மயக்கவியல் நிபுணரால் முழு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அதிக ரத்தப்போக்கு இன்றி இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரலை அகற்றினோம். மண்ணீரல் செய்யும் பணியை பிற உறுப்புகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு பிற தொந்தரவுகள் வராது. இருப்பினும், 5 வருடங்களுக்கு ஒரு முறை உரிய தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் எடுத்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளோம்.  தற்போது, அப்பெண் குணமடைந்து, இயல்பான பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண்ணின் உடலில் 2.5 கிலோ எடை கொண்ட மண்ணீரலை அதிக ரத்தபோக்கு இன்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய டாக்டர் சதீஷ்குமார், மயக்கவியல் நிபுணர் டாக்டர் அனுஷா மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழுவினரை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு மற்றும் நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்
பலத்த மழை பொழிவையொட்டி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்: குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு

June 29, 2026
21 Views
மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திமுக தலைவர் கருணாநிதி நினைவு நாள் அனுஷரிப்பு; மாற்று திறனாளி கண்ணீர்; மருங்கூரில் நெகிழ்ச்சி
ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி தலைமையில் வாராந்திர கவாத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account