ஆரல்வாய்மொழி, டிச.17: ஆரல்வாய்மொழி அருகே சனைக வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கனராக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக குமரி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது இந்நிலையில் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று பொதுமக்கள் படுகாயம் அடைவதும் சில நேரங்களில் மரண சம்பவங்களும் நடைபெற்று வருகிறது இதனிடையே மாவட்ட காவல்துறை கனிம வளங்களை ஏற்றி வருகின்ற கனரக வாகனங்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதித்த பின்பும் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.தோவாளை தெற்கூர் காந்திதெரு பகுதியை சார்ந்த சுப்பிரமணியபிள்ளை என்பவர் மகன் மகாதேவன் – 49 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தோவாளையில் இருந்து காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு பார்த்து வண்டியை ஓட்டி வரும்போது அதே சாலையில் காவல்கிணறிலிருந்து நாகர்கோவில் நோக்கி தக்கலை மூலச்சல் பகுதியைச் சார்ந்த ஜெபசிங் என்பவர் மகன் ஜெப பிரின்ஸ் – 30 என்பவர்
டாரஸ் லாரியை ஒட்டி வந்தது கொண்டிருந்தார். அவர் டாரஸ் லாரியை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மகாதேவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதினர், இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிகிவித்தார்.இந்த விபத்தால் அவருக்கு வலது கால் முட்டியில் படுகாயமும் மற்றும் இடது பக்கம் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது.இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த மகாதேவன் என்பவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது இதனிடைய விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியின் ஓட்டுனர் ஜெப பிரின்ஸை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்தனர்