தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ,தேசிய நெடுஞ்சாலைத் துறை, உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி பி.ஆர். மீரா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



