தருமபுரியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்க சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மண்டலச் செயலாளர் லட்சுமணன், தலைவர் சிவன், பொருளாளர் முனிரத்தினம், கிளை செயலாளர் திரு வெங்கடாசலம், தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் எஸ். எம். ரவி, விபத்து பிரிவு செயலாளர் முத்து, கோவிந்தராஜ், சக்திவேல், ராஜேந்திரன், பெரியசாமி, பிரகாஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



