தருமபுரி, ஆகஸ்ட் 26 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளைகள் தோறும் கூட்டங்கள் நடத்துவது.
ஓரணியில் உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செய்த ஒருங்கிணைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், BLC, BLA-2 ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி, பென்னாகரம் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் தேர்தல் பணி குழு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வராஜ், தருமபுரி தொகுதி பொறுப்பாளர் செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் பாரி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், தர்ம செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



