கிருஷ்ணகிரி, ஜூன், 3- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை ஜெகதேவி ஊர் பொதுமக்கள் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் எல் ஏ விடம் கும்பாபிஷேக விழா 9-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள அதற்கான அழைப்பிதழை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ரூபேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், ஊர் கவுண்டர் வேலு, ஊர் செட்டியார் விநாயகம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினர்.



