மயிலாடுதுறை, ஆகஸ்ட் 01 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் திருக்கோயிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி தீர்த்த படித்துறையிலிருந்து வான வேடிக்கை மேள, தாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு ஆண் பக்தர்கள் 16 அடி நீள அழகை வாயில் குத்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் தொடர்ந்து மகா தீபராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர். இரவு ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.