திருப்பத்தூர், ஜூலை 30 –
திருப்பத்தூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4) ன்படி மொத்தம் 223 வாகனங்கள் (199 இருசக்கர வாகனங்கள், 03 மூன்று சக்கர வாகனம் மற்றும் 21 நான்கு சக்கர வாகனம்) அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவைகளை தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி 07.08.2025-ம் தேதி காலை 08.00 மணி முதல் 16.00 மணி வரை திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் விடும் வாகனங்களை பார்வையிட விரும்புவோர் 03.08.2025 ஆம் தேதி முதல் 05.08.2025 ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிடலாம். அப்போதே ரூ.100/- செலுத்தி ஏல அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக அனுமதி சீட்டு பெறவேண்டும். ஒரு அனுமதி சீட்டுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ஒவ்வொரு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூபாய்-1000/-மும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 2000/-மும், 07.08.2025 ஆம் தேதி காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் வைத்து செலுத்த வேண்டும். முன்வைப்பு தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுத்த வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் சேர்த்து இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 12% GST -யும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% GST-யும் சேர்த்து செலுத்த வேண்டும் (ஏடிஎம் மற்றும் இணையவழி (online) பணபரிவர்த்தனை வசதி இல்லை.
ஏலத்தொகை முழுவதையும் பணமாக செலுத்தி அப்போதே வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். பணம் செலுத்தியதற்கான இரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திருப்பத்தூர் மாவட்டம் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திருப்பத்தூர்
தொலைபேசி எண்: 9500430626,9994400486,04179-221106