தருமபுரி, ஜூலை 4 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, மல்லமுத்து, வைகுந்தம், பெரியண்ணன், செல்வராஜ், கருணாநிதி, முருகேசன், வீரமணி, பச்சையப்பன், கிருஷ்ணன், சக்திவேல், சண்முகம், வீரமணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் விக்ரமன், கலைஞர் பித்தன் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் சட்டமன்ற பார்வையாளர் பாரி, துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, பொருளாளர் தங்கமணி, ஐடிவி லிங்க் கௌதம், உதயசூரியன், இளைய சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன் நன்றி கூறினார்.