திருப்பூர், ஜூன் 28 –
ஏரும் போரும் எங்கள் குலத்தொழில். சாமிக்கு படையலிட்டு வழிபடுவோம் என கூறி
கள் அருந்தியபடி திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் பேட்டி.
கடந்த சனிக்கிழமை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி
கள் போதைப்பொருள் தடைசெய்ய வேண்டும் என பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கள் பயன்பாட்டில் உள்ளது. தேசிய ஊட்டச்சத்து ஆணையம் கள் 23 வகையான சத்துக்கள் உள்ளதாகவும் கள் உணவுப் பொருள் என வகைப்படுத்தப்பட்டு குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பூர்ண மது விலக்கு எனும் கட்சிகள் உடன் மட்டுமே கூட்டணி என அறிவிக்க தயாரா? தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யவும் வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்க ஆதரவு தெரிவிக்கிறீர்கள். சீமான் மீதான கோபத்தில் பேசி உள்ளீர்கள். அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும் அழைத்து கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கள் இறக்கினால் 100 பேரோடு அரிவாளோடு வந்தால் விவசாயிகள் 1000 பேர் அரிவாளோடு வருவோம். ஏரும் போரும் எங்கள் குலத்தொழில். சாமிக்கு படையலிட்டு வழிபடுவோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் நாங்கள் பதில் கூறுகிறோம். ஒரு மருத்துவர் அறிவியல் பூர்வமாக பேசாமல் திருக்குறள் சிலப்பதிகாரத்தை கொண்டு வருகிறார்.