சங்கரன்கோவிலில் தேர் பவனி வரும் வீதிகள் விரிவாக்கம் நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டனர்/ சங்கரன்கோவில்
நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கரன் கோவிலிருந்து ராஜபாளையம் கழுகுமலை திருநெல்வேலி மற்றும் புளியங்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அகலப்படுத்தும் பணி முடிந்து தற்போது போக்குவரத்து நெருக்கடி இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் முக்கியமாக பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடித்தபசு மற்றும் சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும் தெற்கு ரத வீதி சாலை அகலப்படுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



