தஞ்சாவூர்.ஜூன் 5.
தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளையொட்டி அவரின் சிலைக்கு திமுகவினர் ஊர்வல மாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அமைச்சர் கருணாநிதியின்102 வது பிறந்த நாளை யொட்டி தஞ்சாவூர் மத்திய மாவட்டம் மாநகரம் சார்பில் தஞ்சாவூர் ரயிலடியில் இருந்து மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்துடன் புறப்பட்ட அந்த ஊர்வலம் கலைஞர் அறிவாலயத் தில் நிறைவடைந்தது
பின்னர் அங்குள்ள கலைஞர் கருணாநிதி உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன், எம்எல்ஏ தலைமையில் ,நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது .இதைப்போல் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதையடுத்து கலைஞர் அறிவாலயம் முன்புள்ள கொடிமரத் தில் திமுக கொடியை உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் முரசொலி எம்பி ,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாநகராட்சி மேயர்சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர் கள் புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி மற்றும் ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



