மதுரை மே 18
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்
ஐகான்’25: என்ஜினியரிங் ஹாரிஜான் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இக்கல்லூரி முதல்வர் முனைவர் S.துரைராஜ்,
தலைமையில்
துணை முதல்வர் முனைவர் S.சம்பத் மற்றும் SRM குழுமம் ஒருங்கிணைப்பாளர் M.மனோகரன் ஆகியோர்
முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு SRM குழுமத்தின் தலைவர் முனைவர் ரவி பச்சமுத்து மற்றும் SRM MCET தலைவர் பத்மா பிரியா ரவி மற்றும் தாளாளர் செல்வி. ஹரிணி ரவி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்
இரண்டு நாட்கள்
நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பல
முன்னணி கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்பு மற்றும் கருத்துக்களை
மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து
SRM கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் R.வெங்கடேஷ் பாபு, மற்றும்
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மலேசியா துன் ஹுசைன் ஒன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் யூஸ்ரி யூசோஃப் ஆகியோர் மாணவர்கள் சவால் சார்ந்த கற்றலில் ஈடுபடவும், நடைமுறை மற்றும் சமூகத் தேவைகளுடன் தங்கள் திறன்களை இணைத்துக்கொள்ள உதவும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றியும் வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தின் முதல்வர் முனைவர். பொறியியலின் லிங்கதுரை பேசுகையில், இயந்திர பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்து, அதனடிப்படையில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.அதன் தொடர்ச்சியாக
கருத்தரங்கில் 13 வெவ்வேறு தொழில்நுட்ப அமர்வுகளில் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் வாயிலாக புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் விவாதிக்கப்பட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.



