தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 535 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.
பின்னர், ஒரத்தநாடு வட்டம் வெட்டிக் காடு பகுதியைச் சேர்ந்த செல்வி. பழனியம்மாள் என்பவருக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டி விண்ணப் பித்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் 3 சக்கர சைக்கிளை உடனடியாக வழங்கினார், தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா த/பெ முகம்மது அலி என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்தததையடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டபூர்வ நிலுவைத் தொகை ரூபாய் 15,723 க்கான காசோலையை அவரது குடும்ப உறுப்பினரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்ஸ்ரீதர் ,மாவட்ட வளங்கள் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics