வேலூர் ஏப்: 30
வேலூர் மாவட்டம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாவட்டத் தலைவர் எஸ். சிவராமன் படத்திறப்பு விழாவும் இந்நிகழ்ச்சியில் பதவி உயர்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு விழாவும் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் . மாவட்ட செயலாளர் ஜி.டி பாபு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்புச் செயலாளர் கோபிநாத் வரவேற்பு உரையாற்றினார் மாவட்ட பொருளாளர் எஸ். குமார் வரவேற்புரையாற்றினார் சிறப்பு விருந்தினர்கள் தொடக்க கல்வி துறை முனைவர் . நரேஷ் விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் ஆசிரியர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் சிறப்புரையாற்றி விழா பேருரையாற்றினார். நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் நன்றி உரையாற்றினார்.