திருப்பூர் ஏப்ரல்: 20
அனுப்பர் பாளையம் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது திருப்பூர் எஸ் .ஏ. பி சந்திப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்திநகர் பகுதி செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம் .எல் .ஏ, கே .என். விஜயகுமார் எம்.எல்.ஏ . மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சு. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் எம் .எல். ஏ. பேசியதாவது
தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது கடந்த 20 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூர் பனியன் தொழில் இன்று கார்ப்பரேட் கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விசைத்தறியே இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் உள்ளது. விலைவாசி உயர்வு மின் கட்டணம் உயர்வு சொத்து வரி குடிநீர் வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மக்கள் ஆதிகால மனிதர்களாக ஆகிவிடுவார்கள் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார் .
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் பகுதி செயலாளர்கள் அனைவருக்கும் பி கே எம் முத்து ஹரிஹரன் நாச்சிமுத்து வானவில் கனகராஜ் கவுன்சிலர் தங்கராஜ் சிவளா தினேஷ் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன் 25 ,பழனிச்சாமி மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது



