தஞ்சாவூர். ஏப்ரல் 18.
தஞ்சாவூர் பெரிய கோவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என்று தஞ்சை 18 ஆவது வார்டு பகுதி சபை கூட்டத்தில் முரசொலி எம்பி கூறினார்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் 18 வது வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு முரசொலி எம்பி தலைமை தாங்கினார். மேயர் சன் ராமநாதன் முன்னிலை வகித்தார் கவுன்சிலர் சசிகலா அமர்நாத் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மேல அலங்கம் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் இருபுறத்திலும் பேவர் பிளாக் அல்லது கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் .மின்மோட்டார் பழுதை சரி செய்ய வேண்டும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வார்டில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், சாலை யை விட உயரமாக உள்ள தரைமட்ட பாலத்தை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்
இதைத்தொடர்ந்து முரசொலி எம்பி பேசிகையில்:
தஞ்சாவூர் பெரிய கோவில் சுற்றுலா வளர்ச்சிக்காக நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்தேன். இதையடுத்து மத்திய அரசு ரூபாய் 25 கோடி நிதிஒதுக்கி உள்ளது. இதில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கழிவறைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் புதிய ரேஷன் கடை கேட்டு உள்ளீர்கள். இதற்காக அந்த பகுதியில் அரசு இடம் இருந்தால் கண்டிப்பாக ரேஷன் கடை அமைக்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டின் கீழ் நிதி ஒதுக்கி தருவேன் .பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு 1 மாதத்திற் குள் தீர்வு காண வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் சண். ராமநாதன்: பேசுகையில்: பகுதி சபை கூட்டம் என்பது மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கூட்டி அவர்கள் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதாகும், அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் ,உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



